Wednesday, September 05, 2018

பிரியாணி இலையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? அவசியம் படியுங்கள்

இலைகள் பலவற்றில் பல வகையான ஆரோக்கிய குறிப்புகளும், அழகு குறிப்புகளும் இருக்கும். அதே போன்றுதான் பிரியாணி இலையும் சில அற்புதமான அழகு குறிப்புகளை தனக்குள்ளே வைத்திருக்கிறது.

பிரியாணி இலையில் நிறைய ஊட்டசத்துக்கள் உள்ளது.

பிரியாணி இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள், கனிமச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளது.

இவை உடல் வலுவிற்கு எந்த அளவில் உதவுகிறதோ, அதே அளவிற்கு முக மற்றும் முடியின் அழகிற்கும் பயன்படுகிறது.

பிரியாணி இலையின் அடங்கியுள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.
பிரியாணி இலையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உடலின் செயல்பாட்டை சீராக வைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது, முக சருமத்தில் உள்ள செல்களை மறு உற்பத்தி செய்து முகத்தை இளமையாக வைக்கிறது.

5 காய்ந்த பிரியாணி இலைகளை எடுத்து 2 கப் நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். இந்த நீரில் எரிச்சல் கொண்ட சருமத்தை கழுவுங்கள். அல்லது முகத்தை அதில் முக்கி எடுங்கள். சரும எரிச்சல்கள் நீங்கும்.

பிரியாணி இலையை நீருடன் கொதிக்க வைத்து, வடிகட்டி கொள்ளவும். அடுத்து அதனுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.

பிரியாணி இலைகளை நீரில் கொதிக்க விட்டு, வடிகட்டி பின் அதனை தலைக்கு அலச பயன்படுத்தினால் தலையில் உள்ள பேன் தொல்லை விரைவிலேயே நீங்கும்.

பிரியாணி இலை செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். அதிலும் பிரியாணி இலையை டீயில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

பிரியாணி இலை டைப்-2 நீரிழிவிற்கு நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராதரித்து, இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும். எனவே நீரிழிவு நோயாளிகள் இதனை உணவில் சேர்த்து வருவது நல்லது.

பிரியாணி சாப்பிட்டதும் பலருக்கு ஏன் தூக்கம் வருகிறது என்று தெரியுமா? அதில் உள்ள பிரியாணி இலை தூக்கத்தைத் தூண்டும் என்பதால் தான். நீங்கள் தூக்கமின்மையால் அவஸ்தைப்பட்டால், பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி, அந்நீரை இரவில் தூங்கும் முன் குடித்து வர, நல்ல தூக்கம் வரும்.

சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கற்களைப் போக்க பிரியாணி இலை பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி, அதனைக் தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.

பிரியாணி இலையில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்களான காஃப்பிக் அமிலம், க்யூயர்சிடின் மற்றும் யூஜினால் போன்றவை உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடை செய்து வெளியேற்றி, புற்றுநோய் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.

பிரியாணி இலையில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் உடலில் ஏற்படும் பல மூட்டு வலிகளைக் குறைக்கும். அதிலும் தலை வலிக்கும் போது, அந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால், 1 நிமிடத்தில் தலை வலி போய்விடும்.

பிரியாணி இலையில் உள்ள சத்துக்கள் மற்றும் கலவைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கும். அதற்கு பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, அந்நீரை தினமும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.

Author: verified_user

0 comments: