Sunday, November 04, 2018

30 வயதை தொடும் ஆண்களா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்

30 வயதை தொடும் ஆண்களா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்

முப்பது வயது என்பது ஆண்களுக்கு திருமணத்திற்கு மட்டுமல்ல, உடல்நலத்தின் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டிய வயதாக இருக்கிறது.

மேலும் முப்பது வயதை தாண்டும் ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
நடைபயிற்சி

தினமும் உட்கார்ந்தே வேலை செய்யும் ஆண்களுக்கு முப்பது வயதை தாண்டும் போது எலும்புகளின் வலிமை குறைய ஆரம்பிக்கும். எனவே, தினமும் நடைபயிற்சி, மற்றும் போதிய அளவு உடலுக்கு வேலைகள் தர வேண்டியது அவசியம்.

புற்றுநோய்

புரோஸ்டேட் என்பது ஆண்களின் இனப்பெருக்க பகுதியில் சுரக்கும் ஓர் சுரப்பி. முப்பது வயதுக்கு மேல் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே இது குறித்து கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
மன அழுத்தம்

குடும்ப வாழ்க்கையை வழிநடத்தி செல்லும் ஆண்களுக்கு மனநிலையில் சமநிலையின்மை ஏற்படலாம். எனவே அதனை குறைக்க தினமும் யோகா செய்து வந்தால் அது உங்கள் மனதையும், உடலையும் ஒருமுகப்படுத்த உதவும்.

உடல் எடை அதிகரிப்பு

ஆண்கள் முப்பதுகளில் உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால் உங்கள் வாழ்நாள் கடைசி வரை நீரிழிவு, மாரடைப்பு போன்ற பெரும்பாலான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
உணவு முறை

நமது உணவு மற்றும் வேலை முறை மாற்றத்தினால் உடல் வலிமை மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஆண்கள் தங்கள் உடல் வலிமை குறித்து அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு

உலக அளவில் 15 முதல் 35 வயதுக்குள்ளான ஆண்களுக்கு விதைப்பை புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், உடனே சரி செய்துவிடமுடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் உடலில் ஏதேனும் புதிய எதிர்மறை அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
புற்றுநோய் உண்டாவதற்கு காரணமாக உள்ள உணவுகள்: இனிமேல் சாப்பிடாதீங்க!

புற்றுநோய் உண்டாவதற்கு காரணமாக உள்ள உணவுகள்: இனிமேல் சாப்பிடாதீங்க!

தினமும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும் அதனை எளிதில் குணமாக்கலாம்.

மேலும் இயற்கையாக கிடைக்கும் உணவு பொருட்களை பதப்படுத்துதல், சேகரித்து வைத்தல் போன்ற பலவிதமான தயாரிப்பு முறைகள் மூலம் உருவாக்கப்பட்ட உணவுகள் புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சோடியம் நைட்ரைட் மற்றும் நைட்ரெட் ஆகிய பதன பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் கணைய புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

எரியூட்டப்பட்ட உணவுகள்

புகை ஊட்டப்பட்ட உணவுகள் பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஐட்ரோ கார்பன்களை உற்பத்தி செய்கின்றது. இந்த வேதிப்பொருள் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

எரியூட்டப்பட்ட உணவுகளை அதிக வெப்பத்தில் சமைக்கப்படுவதால், அதில் உள்ள ஹெட்டிரோசைக்ளிக் அமின்கள் எனும் வேதிப்பொருள் குடல் மற்றும் கணைய புற்றுநோயை உண்டாக்கும்.
மரபணு மாற்றப்பட்ட உணவுகள்

ரசாயனங்கள் மூலம் மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், மீன்கள் மற்றும் கோழி, வாத்து போன்ற உணவுகள் கட்டிகள் வரும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

மேலும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தக்காளி, உருளைக்கிழங்கு, சோயா, சால்மன் மீன்கள் போன்றவற்றால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

இனிப்பு பானங்கள்

இனிப்பு பானங்களாகிய சோடா போன்றவற்றில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் நிறமூட்டி பதனப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே இத்தகைய இனிப்பு பானங்களை வாரத்திற்கு 2 முறைக்கு மேல் குடித்தால், அவர்களுக்கு 87% செரிமான மண்டலத்தில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
பூச்சிக்கொல்லி உணவுகள்

இயற்கையாக உற்பத்தியாகும் காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவிக்க பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துகின்றனர், இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளில் உள்ள நச்சுகள் கேன்சரை உருவாக்குகின்றன.

பொரித்த உணவுகள்

எண்ணெய்யில் பொரித்த உணவுகளான சிப்ஸ்களில் அகிரிலமிட் எனும் ரசாயனம் உள்ளது, இது புற்றுநோயை உண்டாக்குகிறது.

அதுவும் பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யில் ஆல்டிஹைட் எனும் நச்சு உள்ளது. இதுவும் புற்றுநோய் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

Saturday, November 03, 2018

விமானத்தின் கருப்பு பெட்டியில் என்னதான் இருக்கிறது !! ஒரு ஸ்பெஷல் ரிப்போட் !!

விமானத்தின் கருப்பு பெட்டியில் என்னதான் இருக்கிறது !! ஒரு ஸ்பெஷல் ரிப்போட் !!

ஒரு விமானத்தின் முக்கியமான பகுதிகளில் ஒன்று கருப்பு பெட்டி. இதன் பெயர் கருப்பு பெட்டி(Block Box) என்றிருந்தாலும் அது கரும் ஆரஞ்சு நிறத்தில் தான் இருக்கும். 

விமானம் பறந்து கொண்டு இருக்கும்போது விமானிக்கும், தரையில் உள்ள விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் நடைபெறும். அதே போல், விமானத்துக்குள் விமானியும், துணை விமானியும் விமானத்தை இயக்குவது தொடர்பாக பேசிக் கொள்வார்கள். இவை அனைத்தும், கருப்பு பெட்டியில் பதிவாகும். பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விமானம் விழுந்து சுக்குநூறாக நொறுங்கினாலும், தீப்பிடித்து முழுவதும் கருகினாலும் அல்லது கடலில் பல மைல் ஆழத்தில் மூழ்கினாலும் கூட இந்த கருப்பு பெட்டி மட்டும் பெரும்பாலும் சேதம் அடையாது. அவ்வளவு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது.

கண்டுபிடிப்பு :
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரனின் அப்பா, ஆஸ்திரேலிய விமான ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக பணிபுரிந்தவர். 1934ல் ஒரு விமான விபத்தில் பலியானார். கடந்த 1953ல் "காமெட்' என்ற ஜெட் விமானம் விபத்துக்குள்ளான போது, அது பற்றிய விசாரணையில் டேவிட் வாரனும் ஈடுபட்டு உதவினார். அப்போதுதான் இதுபோன்ற விமான விபத்துகளைக் கண்டறியும் ஒரு கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். அதன் பின், 1956ல் அவர் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடித்து வெளியுலகுக்கு அறிவித்தார். 

இருந்தாலும் டேவிட் வாரனின் கருப்பு பெட்டி முழுப் பரிமாணம் மற்றும் பயனை உணர்ந்து அதை விமானங்களில் பொருத்த மேலும் ஐந்தாண்டுகள் தேவைப்பட்டன. அவரது கண்டுபிடிப்பு, உலக விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பான பயணத்துக்கு ஒப்பற்றதாக கருதப்படுகிறது.

விமானத்தில் கருப்புப் பெட்டி பொருத்துவதை முதன் முதலில் கட்டாயமாக்கியது ஆஸ்திரேலியாதான்(1960). 

கருப்பு பேட்டியின் நீளம், உயரம் : 
பொதுவாக கருப்பு பெட்டி 19.6 அங்குலம் நீளமும், 4.8 அங்குலம் உயரமும் கொண்டதாக இருக்கும் இந்த கருப்பு பெட்டி வி்மானத்தின் வால் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். 

அப்படி என்னதான் இருக்கு கருப்பு பெட்டியில் : 
கருப்பு பெட்டியின் மீது பல அடுக்குகளாக எக்கு தகடுகள் சுற்றப்பட்டு இருக்கும். அதனால், விமானம் மோதினாலோ, தீ பிடித்தாலோ, தட்ப வெட்ப நிலையில் அதிகபட்ச மாற்றம் ஏற்பட்டாலோ எந்த பாதிப்பும் கருப்புப் பெட்டிக்கு ஏற்படாது. 

மேலும் எத்தகைய விபத்து ஏற்பட்டாலும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படும் விமானத்தின் வால் பகுதியில் இந்த பெட்டி பொருத்தப்பட்டு இருக்கும். இவ்வளவு பாதுகாப்பான பகுதியில் அமைந்துள்ள கருப்பு பெட்டியில் விமானம் பறந்த உயரம், பைலட்டுகள் அறையில் நடந்த உரையாடல், அங்கு ஏற்படும் ஒலிகள், பைலட்டுகளின் குரல்கள், விமானத்தின் வேகம், நேர்குத்து இயக்கம், விமானத்தின் இடம் என விமானத்தை பற்றிய உண்மையான நிலவரங்கள் பதிவாகிக் கொண்டு இருக்கும். எனவே விபத்து நடந்த போது நிலவிய சூழ்நிலையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

கருப்பு பெட்டி பூமியின் ஈர்ப்பு சக்தியை விட 3 ஆயிரத்து 500 மடங்கு அதிக ஈர்ப்பு சக்தியை தாங்க கூடியது. எனவே எவ்வளவு வேகத்தில் எந்த இடத்தில் விழுந்தாலும் உடையாது. லேசான சேதம் கூட ஏற்படாது. 

கருப்பு பெட்டியின் ஒரு பகுதியில் சிறிய குழாய் போன்ற பிஞ்சா என்ற கருவி பொருத்தப்பட்டு இருக்கும். கருப்பு பெட்டி தண்ணீருக்குள் விழுந்தால் இது சத்தம் எழுப்ப ஆரம்பித்து விடும். தொடர்ந்து 30 நாட்கள் சத்தம் எழுப்பி கொண்டே இருக்கும். இதில் இருந்து வெளியாகும் சிக்னல் 20 ஆயிரம் அடி தூரம் வரை செல்லும். 

2012 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும்.
1000 டன் இரும்பு பாளத்தை போட்டாலும் நசுங்காது.
இதன் பேட்டரிகள் 6 ஆண்டுகள் செயல்படும்.

இரண்டு கருப்பு பெட்டிகள் : 
ஒரு விமானத்தில் இரு பெட்டிகள் இருக்கும்.

1. விமானிகளின் குரலும், கன்ரோட் டவரில் இருந்து வயர்லெஸ் மூலம் பேசுபவரின் குரலும், பதிவாகும் பெட்டி, காக்பிட் வாய்ஸ் ரெகார்டர் எனப்படும். (CVR- Cockpit Voice Recorder)இதை டேப் ரெக்கார்டரில் போட்டால் விபத்துக்கு முன் நடந்த பேச்சுவார்தைகள் இருக்கும் (கடைசி அரை மணி நேரம் மட்டும்)

2. இரண்டாவது பெட்டி ப்ளைட் டேடா ரெகார்டர் எனப்படும். அதில் முக்கியமான விமான இயக்க பதிவுகளும், விமானியின் செயல்களும் பதிவாகி இருக்கும். FDR - Flight Data Recorder. இதை கணணியில் போட்டால் கிராப் வரும், இன்னும் நல்ல கணணியில் போட்டால் விமானம் போவது படமாக (கிராபிஸ்) வரும்.



விபத்து நேர்ந்தால் அதிகம் பாதிக்காத வகையில், 2 பெட்டிகளும் வால் பகுதியில்தான் வைக்கப்பட்டு இருக்கும். இரண்டு கருப்பு பெட்டிகளும் 25 மணி நேரம் நடைபெறும் சம்பவங்கள், உரையாடலை பதிவு செய்யும். 

கருப்பு பெட்டியை மீட்பதில் உள்ள சிரமங்கள்...

கடலுக்கு அடியில் நீரின் வெப்பம் 104 டிகிரியாகவும், அழுத்தம் ஒரு சதுர அங்குலத்திற்கும் 7 ஆயிரம் பவுண்டாக இருப்பதால் அத்தனை ஆழத்தில் உள்ள கருப்பு பெட்டியை நீச்சல் வீரர்கள் முலமாகவோ, சாதாரண நீர் மூழ்கி கப்பல் மூலமாகவோ மீட்டு வருவது முடியாத ஓன்றாகும். 

எனவே கடல் மட்டத்திலிருந்து கேபில் இணைப்புடன் கூடிய ரி்மோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் சிறிய நீர்மூழ்கி வாகனத்தை இயக்கி கருப்பு பெட்டியில் இருந்து வரும் சிக்னல் முலம் அதை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

கருப்பு பெட்டி கையில் கிடைத்தால்தான் விபத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியும். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் நடக்காமல் தடுக்க முடியும்.

விரைவில் கருப்பு பெட்டிகளை விமானத்தில் மட்டும் அல்லாமல், பேருந்துகளிலும் பயன்படுத்த இந்திய அரசு முற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அப்படி எல்லா பேருந்துகளிலும் பொருத்தும் பட்சத்தில் பேருந்து விபத்துக்கான காரணங்கள் தெளிவாகவும், விரைவாகவும் தெரியும். (வலைத்தமிழ்)

Tuesday, October 30, 2018

செவ்வாழை சாப்பிட்டால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா? கண்டிப்பா தெரிஞ்சுகோங்க!

செவ்வாழை சாப்பிட்டால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா? கண்டிப்பா தெரிஞ்சுகோங்க!

செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

செவ்வாழையில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
  • கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
  • மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
  • சிவப்பு வாழைப்பழங்கள் பொட்டாசியம் நிறைந்தவை. இவை உடலின் வழக்கமான கழிவு வெளியேற்றும் வேலைக்கு அவசியம். பொட்டாசியம் சிறுநீரக கற்கள், இதய நோய் மற்றும் புற்றுநோய் உருவாவதை தடுக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மேலும் கால்சியம் தக்க வைத்து உதவுகிறது.
  • பல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
  • சிவப்பு வாழைப்பழம் ஆண்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்த நம்பிக்கையை ஆதரிக்க பல ஆய்வுகள் சாதகமாக முடிவுகள் தெரிவிக்கின்றது. வாழைப்பழங்களில் பி வைட்டமின்கள் மற்றும் புரோமைன் என்சைம் ஆகியவை விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.
  • செவ்வாழை வயிற்றில் உள்ள அமிலத்தன்மையின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் வயிறு எரிச்சலும் குறைகிறது.

Friday, October 19, 2018

இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட இவைதான் காரணமாம்: கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட இவைதான் காரணமாம்: கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

உலகின் கொடிய நோய்களில் முக்கியமான ஒன்று மாரடைப்பு. மேலும் எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க நேரம் கிடைக்கும் ஆனால் மாரடைப்பிலிருந்து தப்பிக்க இயலாது.

நன்றாக இருக்கும் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணடைவது தற்போது இயல்பாகி வருகிறது.

மாரடைப்பு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு, பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அதற்கு நம்முடைய சில மோசமான வாழ்வியல்முறைகளும் காரணமாக உள்ளது.
மாரடைப்பு ஏற்படமுக்கிய காரணங்கள்
உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் இதயத்துக்குச் செல்லும் கரோனரி ரத்தக் குழாய்கள் தடித்து வீங்குவதால், இதயத்துக்கு ரத்தம் செல்வது கொஞ்சம் கொஞ்சமாகத் தடைப்படுகிறது. இதனால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

புகைப்பிடித்தல்

தினமும் ஒருவர் புகைப்பிடிப்பதால், புகையிலையில் உள்ள நிக்கோடின் மற்றும் சில வேதிப் பொருட்கள் நுரையீரலில் படிந்து, நுரையீரலின் செயல்திறனைக் குறைக்கிறது. இதனால் ரத்தக் குழாய்களில் அந்த வேதிப் பொருட்கள் படிந்து அடைப்பை உண்டாக்குவதால், மாரடைப்பு பிரச்சனை ஏற்படுகிறது.

உடல் பருமன்

ஒருவரின் அதிகப்படியான உடல் பருமன், மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கியமான மறைமுகக் காரணியாகும். எனெனில் உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் எளிதில் தாக்கும். எனவே சர்க்கரை நோய், உடல் பருமன் இரண்டும் ஒன்று சேர்வதால், கரோனரி ரத்தக் குழாய்கள் வீங்கி, மாரடைப்பு பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

கொலஸ்ட்ரால்

ஒருவரின் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அவை இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் படிந்து, ரத்த ஓட்டத்தைத் தடை செய்கிறது. எனவே இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாத சமயத்தில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இதனால், ரத்தக் குழாய்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சீரான முறையில் இதயத்திற்கு ரத்தம் செல்வது தடுக்கப்படுவதால், மாரடைப்பு ஏற்படுகிறது.

Monday, October 01, 2018

பிக்பாஸில் ஜெயித்த 50 இலட்சத்தை வைத்து வெற்றியாளர் செய்த காரியம்! அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

பிக்பாஸில் ஜெயித்த 50 இலட்சத்தை வைத்து வெற்றியாளர் செய்த காரியம்! அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

தமிழ் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ரித்விகாவும், தெலுங்கு வெற்றியாளராக அதிக ஓட்டுகளைபெற்று கெளஷல் மண்டாவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இரண்டு வெற்றிப் பெற்ற போட்டியாளருக்கும் 50 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது.

இதில், தெலுங்கு வெற்றியாளர் கெளஷல் மண்டா வெற்றி பணத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்படியே வழங்கியுள்ளார்.

இதனால், பார்வையாளர்களும், ரசிகர்களும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். கெளஷல் மண்டா சீரியல்கள், டிவி ஷோக்கள் என கலக்கிய இவர் படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Wednesday, September 05, 2018

பிரியாணி இலையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? அவசியம் படியுங்கள்

பிரியாணி இலையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? அவசியம் படியுங்கள்

இலைகள் பலவற்றில் பல வகையான ஆரோக்கிய குறிப்புகளும், அழகு குறிப்புகளும் இருக்கும். அதே போன்றுதான் பிரியாணி இலையும் சில அற்புதமான அழகு குறிப்புகளை தனக்குள்ளே வைத்திருக்கிறது.

பிரியாணி இலையில் நிறைய ஊட்டசத்துக்கள் உள்ளது.

பிரியாணி இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள், கனிமச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளது.

இவை உடல் வலுவிற்கு எந்த அளவில் உதவுகிறதோ, அதே அளவிற்கு முக மற்றும் முடியின் அழகிற்கும் பயன்படுகிறது.

பிரியாணி இலையின் அடங்கியுள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.
பிரியாணி இலையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உடலின் செயல்பாட்டை சீராக வைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது, முக சருமத்தில் உள்ள செல்களை மறு உற்பத்தி செய்து முகத்தை இளமையாக வைக்கிறது.

5 காய்ந்த பிரியாணி இலைகளை எடுத்து 2 கப் நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். இந்த நீரில் எரிச்சல் கொண்ட சருமத்தை கழுவுங்கள். அல்லது முகத்தை அதில் முக்கி எடுங்கள். சரும எரிச்சல்கள் நீங்கும்.

பிரியாணி இலையை நீருடன் கொதிக்க வைத்து, வடிகட்டி கொள்ளவும். அடுத்து அதனுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.

பிரியாணி இலைகளை நீரில் கொதிக்க விட்டு, வடிகட்டி பின் அதனை தலைக்கு அலச பயன்படுத்தினால் தலையில் உள்ள பேன் தொல்லை விரைவிலேயே நீங்கும்.

பிரியாணி இலை செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். அதிலும் பிரியாணி இலையை டீயில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

பிரியாணி இலை டைப்-2 நீரிழிவிற்கு நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராதரித்து, இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும். எனவே நீரிழிவு நோயாளிகள் இதனை உணவில் சேர்த்து வருவது நல்லது.

பிரியாணி சாப்பிட்டதும் பலருக்கு ஏன் தூக்கம் வருகிறது என்று தெரியுமா? அதில் உள்ள பிரியாணி இலை தூக்கத்தைத் தூண்டும் என்பதால் தான். நீங்கள் தூக்கமின்மையால் அவஸ்தைப்பட்டால், பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி, அந்நீரை இரவில் தூங்கும் முன் குடித்து வர, நல்ல தூக்கம் வரும்.

சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கற்களைப் போக்க பிரியாணி இலை பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி, அதனைக் தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.

பிரியாணி இலையில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்களான காஃப்பிக் அமிலம், க்யூயர்சிடின் மற்றும் யூஜினால் போன்றவை உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடை செய்து வெளியேற்றி, புற்றுநோய் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.

பிரியாணி இலையில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் உடலில் ஏற்படும் பல மூட்டு வலிகளைக் குறைக்கும். அதிலும் தலை வலிக்கும் போது, அந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால், 1 நிமிடத்தில் தலை வலி போய்விடும்.

பிரியாணி இலையில் உள்ள சத்துக்கள் மற்றும் கலவைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கும். அதற்கு பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, அந்நீரை தினமும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.
யாரெல்லாம் இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடலாம் தெரியுமா?

யாரெல்லாம் இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடலாம் தெரியுமா?

இரவு உணவுக்கு பின்னர் வாழைப்பழம் சாப்பிட்டால் ஒரு சிலருக்கு நன்மைகள் தந்தாலும், பெரும்பாலானோருக்கு உடலில் கலோரி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஒரு சிலர் இரவு உணவுக்குப் பின் வாழைப்பழம் சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். வாழைப்பழத்தில் பிரக்டோஸ் என்கிற சர்க்கரை சத்து உள்ளது.

இது கொழுப்பாக மாறி நமது உடலில் நிரந்தரமாக தங்கி விடும் வாய்ப்பு உள்ளது. இரவில் உணவிற்கு பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவதால் விரைவில் செரிமானம் உண்டாகும்.

இதனால் காலைக்கடன் கழிப்பதில் பிரச்சனை ஏற்படாது என்றாலும், வயிற்று உபாதை காரணமாக காலைக்கடன் முடிக்க சிரமப்படுபவர்களுக்கு இது பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே இவர்கள் இரவு உணவிற்கு பின்னர் வாழைப்பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

எனினும், 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இரவில் வாழைப்பழத்தை கொடுக்கலாம். தொடர்ந்து இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு சளித்தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.

விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்கள் இரவு உணவிற்கு பின் வாழைப்பழம் சாப்பிடுவது நன்மை தரும். இதனால் உடலில் கலோரி அதிகரிப்பதுடன், களைப்படையாமல் நீண்ட நேரம் உடற்பயிற்சிகள் செய்ய முடியும்.

இரவு உணவிற்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் பிரச்சனையை சந்திப்பவர்கள், அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வயதானவர்களும், நீரிழிவு நோய் உள்ளவர்களும் இரவு நேரங்களில் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது.

Sunday, June 24, 2018

உள்ளாடை அணிவதில் தினந்தோறும் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்!!!

உள்ளாடை அணிவதில் தினந்தோறும் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்!!!

உள்ளாடை என்பது வெறும் ஆடையாக மட்டும் கருத முடியாது. இது உங்கள் ஆணுறுப்பை பாதுகாக்கும் ஓர் கவசமும் கூட. உங்கள் இல்லற வாழ்கையில் உள்ளாடைக்கும் ஓர் பங்கிருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இதில் என்ன தெரிந்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது என்று கேட்கிறீர்களா..

நீங்கள் உங்களுக்கு ஏற்ற உள்ளாடை தான் அணிகிறீர்களா என்று உங்களுக்கு தெரியுமா? முதலில் பெரும்பாலானவர்கள் உள்ளாடையையே சரியாக அணிவதில்லை. உள்ளாடையை மிக இறுக்கமாக அணிவது தவறு. கோவணம் என்றால் நக்கல் அடிக்கும் சிலருக்கு அது ஒரு சிறந்த உள்ளாடை உடை என்பது தெரிவதில்லை.

சரியான அளவு, சரியான வகை (துணிகளில்) நீங்கள் தேர்ந்தெடுத்து உள்ளாடை அணிய வேண்டியது அவசியம்…

விந்து மற்றும் இரத்தத் ஓட்டம் பாதிப்பு

சில ஆண்கள் ஃபிட் என்று நினைத்துக் கொண்டு மிக இறுக்கமாக உள்ளாடை அணியும் வழக்கம் கொண்டிருப்பார்கள். இதனால், இடுப்புக்கு கீழ் பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் தடைப்படும். இதனால் விந்து உற்பத்தி கூட பாதிக்கப்படலாம்.

ஃபேப்ரிக் உள்ளாடை

சில வகை ஃபேப்ரிக் உள்ளாடை, நைலான் போன்ற கலப்புடன் தயாரிக்கப்படுகிறது, இது வியர்வையை உறிஞ்சும் தன்மையற்றவை. அதனால், வியர்வை பிறப்புறுப்பு, தொடை இடுக்கு மற்றும் புட்டம் பகுதியில் அப்படியே தங்கிவிடும். இதனால் கிருமிகளின் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

காட்டன் தான் நல்லது

அந்த காலத்தில் நமது பாட்டன்மார்கள் கோவணம் கட்டியதை தான் இன்று கேலி கிண்டல் செய்கிறோம். ஆனால், வெளியில் மற்றும் குளிர் இரண்டு காலத்திற்கும் சாரியான தேர்வு காட்டன் உடைகள் தான். அதிலும் உள்ளாடைகளில் காட்டன் அணிவது, பிறப்புறுப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவண்ணம் பாதுகாக்கும்.

ப்ரீஃப்ஸ் – Briefs
பெரும்பாலும் ஆண்கள் விரும்பி அணியும் உள்ளாடை ப்ரீஃப்ஸ் – Briefs. ஜிம் சென்று தங்களது தொடைகளை வலுவாக வைத்திருக்கும் ஆண்களுக்கு இந்த வகை ஆடை எதுவாகவும், ஏற்புடையதாகவும் இருக்கும். விளையாட்டு மற்றும் ஓட்டபந்தயம் போன்றவற்றில் ஈடுபடும் ஆண்களுக்கு இது தடையின்றி செயல்பட உதவும்.

பாக்சர் ஷார்ட்ஸ்

கிட்டத்தட்ட சென்ற நூற்றாண்டில் நமது தாத்தா அணிந்த அதே பட்டாப்பட்டி தான் இன்று பாக்சர் ஷார்ட்ஸ் என்று விற்கப்படுகிறது. இடை பகுதியில் எலாஸ்டிக் உதவியோடு இறுக்கமாகவும், தொடை பகுதியில் கொஞ்சம் லூசாகவும், இலகுவாகவும் இருக்கும். வெயில் காலங்களில் இதை, அந்த இடத்தில் எரிச்சல் ஏற்படாமல் இருக்க உடுத்தலாம்.


பாக்சர் ப்ரீஃப்ஸ்
ப்ரீஃப்ஸ் மற்றும் பாக்சர்ஸின் கலப்பு இது என கூறலாம். இடை மற்றும் தொடை பகுதியோடு ஃபிட்டாக இருக்கும். வெயில் காலங்களில் இதை அணிவதை தவிர்த்து, குளிர் காலங்களில் உடுத்தலாம்.

தாங் – Thong
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்களுக்கு ஏற்ற உள்ளாடையாக கருதப்படுவது “தாங்” எனப்படும் இந்த உள்ளாடை வகை.

ஜாக்ஸ்ட்ரேப் – Jockstrap
ஜாக்ஸ்ட்ரேப் – Jockstrap, எனப்படும் இந்த உள்ளாடை ஓர் சிறய வகை உள்ளாடை ஆகும். நம் நாட்டில் இது பிரபலம் இல்லை எனிலும், வெளிநாடுகளில் கொஞ்சம் பயன்படுத்தப்படும் உள்ளாடை வகையாக இருக்கிறது. இது ஆணுறுப்பை மற்றும் மறைக்கும் வகையில் இருக்கும். மற்றவகையில் இதை அணிந்தால் புட்டம் அப்பட்டமாக வெளித்தெரியும்.
பாம்புக்கடிக்கான முதலுதவி: அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று!!!

பாம்புக்கடிக்கான முதலுதவி: அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று!!!

ஒருவர் பாம்புக்கடிக்குள்ளானால் இயன்றவரை பாதிக்கப்பட்டவரை பதற்றமடையச் செய்யவேண்டாம். பதற்றமடைந்தால் இதயத்துடிப்பு வேகம் அதிகரிக்கும். இதனால் நஞ்சு விரைவாக உடலில் பரவலாம். எனவே மருத்துவம் மூலம் குணப்படுத்த முடியும் என நம்பிக்கையளித்து அவரது பதட்டத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும்.

கடிபட்டவருக்கு எல்லாவகைப் பாம்புகளும் அபாயமானதல்ல என்று விளக்கவேண்டும். அத்துடன் கடிபட்ட அனைவருக்கும் விஷம் ஏறி இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும் உறுதிபடத் தெரிவிக்க வேண்டும்.

காயத்தை சோப் (soap) போட்டு ஓடும் நீரில் கழுவவேண்டும்.காயமடைந்த இடத்தைக் கூரிய ஆயுதங்களால் கிழிக்க வேண்டாம்.கடிபட்ட பாகத்தை அசையாது வைத்திருந்தால் அது இரத்த ஓட்டத்தை தாமதப்படுத்த உதவம். முடிந்தால் பாம்பின் வகையை கேட்டறிந்து கொள்வது மருத்துவத்துக்கு உதவியாக இருக்கும்.

ஆபத்தான நான்கு நச்சுப்பாம்புகள்

1)நாகம்
2)கட்டு விரியன்
3)சுருட்டைப் பாம்பு
4)கண்ணாடி விரியன்

கடிவாயின் மீது கீறுவதோ,உறுஞ்சுவதோ, கட்டுவதோ தவிர்க்கப்படல் வேண்டும்.கடிவாயின் மேற்பகுதியில் கட்டுப் போடுவதன் மூலம் சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் செல்கள் இறக்கக்கூடும். வாய்வைத்து உறிஞ்சும் போது வாயில் புண் இருந்தாலோ அல்லது நாக்கு போன்ற விரைவாக உறிஞ்சக் கூடியவை நஞ்சினை உறிஞ்சக் கூடும். இதனால் பாம்புக் கடிக்கு உள்ளானவர் தவிர முதலுதவியாளரும் ஆபத்துக்கு உள்ளாகலாம்.

“ஆஸ்பிரின்” ,“மதுபானம்” முதலியவற்றை கொடுக்கக்கூடாது.உடன் மருத்துவமனைக்கு கடிபட்டவரை கொண்டு செல்ல வேண்டும்.சரியான முதலுதவிகள் செய்வதன் மூலமும், மருத்துவம் மூலமும் பாம்புக்கடியினால் ஏற்படும் பெரும்பாலான இறப்புக்களைத் தவிர்க்க முடியும்.

(Tamil Hippo)